செய்திகள்

விஷாலின் ’லத்தி’ டிரைலர் குறித்து அறிவிப்பு

DIN

லத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘வீரமே வாகை சூடும்’ படத்தக்கு பிறகு லத்தி என்ற படத்தில் விஷால் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். விஷால் போலீஸாக நடித்துவரும் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர்  வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

லத்தி திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருந்தது. பின்னர், சில பிரச்னைகள் காரணமாக படம் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் டிரைலர் வருகிற டிச.12 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி கிறிஸ்துமஸை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT