முகப்பு
செய்திகள்

மிரட்டல் லுக்கில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா: வெளியானது ஜிகர்தண்டா-2 டீசர்!

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் இன்று வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:04 AM
பகிர்:

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் இன்று வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்தைத் தொடர்ந்து  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் தற்போது அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஜிகர்தண்டா-2 படத்தின் டீசரை படக்குழு இன்று மாலை வெளியிட்டுள்ளது. டீசரில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் மிரட்டல் லுக்கில் தோன்றுகின்றனர். மேலும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.