’அடுத்த 10 ஆண்டுகளுக்கு நான் செட்டில்..’: லோகேஷ் கனகராஜ்
தன் அடுத்த படங்களின் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
தன் அடுத்த படங்களின் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.400 கோடி அளவிற்கு பெரும் வசூல் சாதனையைப் படைத்தது.
ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிக்க: மீண்டும் பேய் படத்தில் சந்தானம்!
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம் திரைப்படங்களின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “ லோகேஷ் கனகராஜ் யூனிவெர்ஸில் என்னால் கைதி 2, விக்ரம் 2 என அப்படங்களின் கருவை முன்வைத்தும் ரோலக்ஸ் போல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விரிவாக உருவாக்க முடியும். அதனால், இன்னும் 10 ஆண்டுகளுக்கு நான் செட்டில் ஆகிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.