அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற விழாவில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதிவியேற்றார்.
அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பதவிப் பிரமாணத்துடன், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின்!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
இனிமேல் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை. நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுகிறேன். இயக்குநர் மாரி செல்வராஜின் ’மாமன்னன்’ படமே கடைசி படம் என்றார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் “தம்பி உதயநிதி ஸ்டாலினை வாழ்த்துகிறேன். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது” என தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.