’மாநகரம்' பட நாயகனை காதலிக்கும் ரெஜினா?
நடிகை ரெஜினா மாநகரம் படத்தின் நாயகனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
நடிகை ரெஜினா மாநகரம் படத்தின் நாயகனை காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துவருபவர் நடிகை ரெஜினா. ’கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்நிலையில், அவர் தன் 32-வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். ரெஜினாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக நடிகர் சந்தீப் கிஷன் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா. லவ் யூ. சந்தோசமாக இரு. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்’ என அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: அமீர்கானை தொடர்ந்து சிக்கலில் ஷாருக்கான்.. வெல்லுமா பதான்?
இதனால், இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
‘மாநகரம்’ படத்தில் ரெஜினாவும் சந்தீப் கிஷனும் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதே, இவர்கள் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை இதுகுறித்து இருவரும் மனம் திறக்கவில்லை.