பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற மே 30 ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், கணுக்கால் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.
Advertisement
Advertisement
அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஷ் இங்லிஷ் அணியைக் கேப்டனாக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டி மற்றும் டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் ஜோஷ் இங்லிஷுக்கு இருக்கிறது.
ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி லக்னௌ அணிக்காக அதிக ரன்கள் குவித்தார். 13 போட்டிகளில் விளையாடிய அவர் 563 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் மட்டும் அவர் விளையாடவில்லை. தற்போது, அவர் காயம் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்தவுடன், ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடர்களில் மிட்செல் மார்ஷ் இடம்பெறுவாரா என்பதும் சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
Australian captain Mitchell Marsh has withdrawn from the ODI series against Pakistan due to injury.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.