செய்திகள்

காசேதான் கடவுளடா பாடல்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு விளக்கமளித்த நடிகை மஞ்சு வாரியர்

காசேதான் கடவுளடா பாடல் தொடர்பான ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் விளக்கமளித்துள்ளார். 

DIN

காசேதான் கடவுளடா பாடல் தொடர்பான ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் விளக்கமளித்துள்ளார். 

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

முதல் பாடல் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வைசாக் எழுதியுள்ள இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது. இதனை வைசாக், மஞ்சு வாரியர் இணைந்து பாடியுள்ளனர். ஆனால் இந்தப் பாடலில் மஞ்சு வாரியர் எங்கு பாடியிருக்கிறார் என்றே தெரியவில்லை என இணையதளங்களில் ரசிகர்கள் மீம்ஸ் பதிவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காசேதான் கடவுளடா பாடலில் எனது குரல் கேட்கவில்லை என சொல்பவர்கள் கவனத்திற்கு. கவலைப்பட வேண்டாம். பாடலின் விடியோ வெர்ஷனுக்கான என்னுடைய குரல் ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT