'நான் அந்த மாதிரி பெண் இல்லை' - சீறும் டாப்ஸி: காரணம் என்ன?
நடிகை டாப்ஸி மீண்டும் புகைப்படகலைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
35 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ‘டோபாரா’படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இயக்குநர் அனுராக் டாப்சி இணைந்து பணியாற்றும் 3வது திரைப்படத்தின் புரமோஷனுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு வந்த போது புகழ் பெற்றவர்களைப் படமெடுத்துப் பத்திரிகைகளுக்கு விற்பதற்காக அவர்களைப் பின்தொடரும் தனிமுறை நிழற்படக் கலைஞர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிக்க: யார் நம்பர்.1 நடிகர்? அஜித் மேலாளரின் பதிலடி ட்வீட்?
Advertisement
Advertisement
கடந்த 2010ஆம் ஆண்டு ஸ்பானீஷ் மொழியில் வெளியான திரில்லர் திரைப்படமான ‘ஜூலியாஸ் ஐஸ்’ படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகியுள்ளது ப்ளர் திரைப்படம். டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல இயக்குநர் அஜய் பாஹல் இயக்கியுள்ளார். இந்த படத்தை டாப்ஸியும் இணைந்து தயாரித்துள்ளது கூடுதல் சிறப்பு. இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு வந்தபோது மீண்டும் பிரச்சினை கிளம்பியது. அவர் காருக்குள் நுழையும்போது காரின் கதவை மறித்து புகைப்படம் எடுத்தது தவறென ஆவேசமாக கூறினார்.
இதையும் படிக்க: அஜித் முதுகுல குத்திட்டாங்க: ரசிகர்கள் கிண்டல் !
தற்போது இதே மாதிரி மீண்டும் புகைப்பட கலைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:
நான் காருக்குள் போகும்போது காரின் கதவை பிடித்து காமிராவை முகத்துக்கு நேராக நீட்டினால்? இதேபோல உங்களுக்கு நடந்தால் எப்படி இருக்கும்? எனது தனிப்பட்ட வாழ்க்கைகுள் ஏன் வரவேண்டும். என்னை எரிச்சலடைய வேண்டுமென்றே இதை செய்கிறார்கள். ஆண், பெண் யாரக இருந்தாலும் இந்த மாதிரி செய்வது தவறு.
இதையும் படிக்க: நடிகர் அசோக் செல்வன் ‘நாய்’ என குறிப்பிட்டது இந்த விமர்சகரையா?
நான் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்வதால் இந்த மாதிரி காமிராவையும், மைக்கையும் முகத்துகு நேராக கொண்டு வருவதா? நான் பிரபலம் என்பதால் சாதரண மனிதருக்கு கிடைக்கும் மூச்சிவிடும் அளவுக்கு கூட எனக்கு சுதந்திரம் தருவதில்லை. சாதராண மனிதருக்கு தரவேண்டிய மனிதநேயம் தராமல் இருந்துவிட்டு என்னை மீடியா எனக்கு திமிர்தனம் என்று கூறுமானால், சொல்லட்டும். எனக்கு கவலையில்லை. நான் பெண் என்பதால் இதில் மழுப்பி சொல்ல மாட்டேன். நான் அந்த மாதிரி பெண் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதற்கு ஏற்றார் போல என்னிடமிருந்து பதில் வரும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.