செய்திகள்

ஆர்.ஜே. பாலாஜிக்கு என்னாச்சி? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் தாடி மீசை இல்லாத புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

DIN

ஆர்.ஜே.பாலாஜி பதிவிட்ட தாடி, மீசை இல்லாத புகைப்படத்திற்கு காரணம் ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குநர் கோகுலுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘சிங்கப்பூர் சலூன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் கோகுலின் நகைச்சுவை பாணியிலான படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக கூறியுள்ளார். மேலும் இந்தப் படம் 2023ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் பகிர்ந்த தாடி மீசையில்லாத புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு “ஏன் ப்ரோ ஷேவ் பண்ணீங்க”, “ஷாக் ஆய்டேன் ப்ரோ” என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சிகையலங்காரம் தொடர்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக ஒன்றரை மாதம் தேர்ந்த சிகையலங்கார கலைஞரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT