செய்திகள்

சாய்பல்லவி நடிக்க வேண்டிய படத்தில் வரலட்சுமி சரத்குமார்!

வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பல விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. இதில் வரலட்சுமி மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வி3 என்பது விந்தியா, விக்டிம், வெர்டிக்ட். அநீதிக்கு எதிராக போராடும்  கதை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அழுத்தம் காரணமாக எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பதும் காட்டப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஹைதராபாத், உத்திரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய இடங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

பாலியல் ரீதியான குற்றங்களுக்கான் தீர்வை முன்வைக்கும் படமாகவும் இது இருக்குமென இயக்குநர் தெரிவித்துள்ளார். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என கதை 3 காலங்களிலும் பயணிக்கும் என சொல்லப்படுகிறது. இதில் 3 விதமான பொறுப்புகளை வரலட்சுமி ஏற்று நடித்துள்ளதாக தெரிகிறது. 

முதலில் சாய்பல்லவி நடிக்க வேண்டியதாக இருந்ததாகவும், பின்னர் தேதி காரணமாக அவர் கால்சீட் கிடைக்காமல் வரலட்சுமி தேர்வானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கன்னட நடிகை பாவன கௌடா விந்தியாகவும், பாபநாசம் புகழ் எஸ்தர் அனில் அவர் தங்கையாகவும் நடித்துள்ளார்கள். விசாரனை கதாசிரியர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT