செய்திகள்

‘கோல்டு’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'கோல்டு' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை பிருத்விராஜின் பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்துக்கு இசையமைக்க, ஆனந்த் சி சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் மாதம் 1ஆம் நாள் திரையரங்கில் வெளியானது. 

கோல்டு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. இது குறித்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் முகநூல் பதிவும் வைரலானதும் பின்னர் அவர் அதை நீக்கியதும் குறிப்பிட்டத்தக்கது. 

இந்நிலையில், கோல்டு படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் டிசம்பர் 29ஆம் நாள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2 ஆப்கன் வீரர்கள் சதம்: இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு!

தேமுதிக கூட்டணி அமைக்க தாமதம் ஏன்? பிரேமலதா பதில்!

அம்மாவுக்கு புது வீடு கட்டி பரிசளித்த நடிகை சோனியா சுரேஷ்!

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் சிலை திருட்டு! இந்தியா கண்டனம்!

காலம் மாறினாலும் காதல் மாறாது: மிருணாள் தாக்கூர்

SCROLL FOR NEXT