மாயி சுந்தர் (கோப்புப் படம்) 
செய்திகள்

'வெண்ணிலா கபடி குழு' பட நடிகர் மாயி சுந்தர் காலமானார்

'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகர் 'மாயி' சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

DIN

'வெண்ணிலா கபடிக் குழு' திரைப்படத்தின் மூலம் பலரால் அறியப்பட்ட நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை 2.45 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 50.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிக் குழு படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் மாயி சுந்தர். அவர், சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்ச காமாலை நோயால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மாயி சுந்தர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று நடைபெறும் எனத் தெரிகிறது.

மாயி சுந்தர், வெண்ணிலா கபடி குழு படத்தைத் தொடர்ந்து, சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ளநரி கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டாகுஸ்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில்  நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளமை வானிலே... பார்த்திபா!

அன்பின் நிமித்தம்... ராஷி சிங்!

அழகும் அமுதும்! - ஜெனிலியா

அழகிய நதி... மாளவிகா மோகனன்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சுதர்ஷன் ரெட்டிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு ஆதரவு!

SCROLL FOR NEXT