செய்திகள்

துணிவு படத்தின் ‘கேங்ஸ்டா’ பாடல் ரிலீஸ் எப்போது? 

துணிவு படத்தின் 3வது பாடல் எப்போது வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

புதிய படத்தின் பாடல்கள் லிரீக் விடியோவாக வெளியிடப்படுவது வழக்கம். எனினும் துணிவு படத்தில் பாடல் லிரீக் விடியோவுக்கு முன்னதாக படத்தில் பாடல் வரிகள் வெளியானது. இதற்கு முன்பு இரண்டு பாடல்கள் துணிவு படத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்றாவது பாடலின் வரிகள் வெளியாகியுள்ளன. இசைமைப்பாளர் ஜிப்ரான் இதனை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டு இருந்தார். 

''கேங்ஸ்டா...'' என்ற தலைப்பில் பாடல் வெளிவரவுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில், தனக்கு எதிரியாக நிற்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இது நேரடியாக விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.  

தற்போது கேங்ஸ்டா பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களும் இதற்காகதான் காத்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் நீக்கம்

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!

ஹாப்பி ராஜ் புரோமோ!

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

SCROLL FOR NEXT