செய்திகள்

‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியானது! 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இயக்கத்தில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் டிரைவர் ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் கார் ஓட்டுநராக நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

சாலை பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தற்போது படம் டிச.30ஆம் நாள் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT