’விஜய் 67’ படத்தில் நடிப்பது உண்மைதான்: பிரபல நடிகர்
விஜய் 67 படத்தில் நடிக்கவுள்ளதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
விஜய் 67 படத்தில் நடிக்கவுள்ளதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பின் விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் உருவாகவுள்ளதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
முன்னதாக, விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு வில்லனாக முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் தேதி பிரச்னையில் விலகியதால் நடிகர் விஷால் இணைந்துள்ளதாக பேசப்பட்டது.
Advertisement
இதையும் படிக்க: ’துணிவு’ டிரைலர் குறித்து தகவல்!
அதன்பின், விஷாலுக்குப் பதிலாக நடிகர் அர்ஜூன் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சம்பளமாக ரூ.4 கோடி பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும், இப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதிபடுத்தும் விதமாக நான் விஜய் 67 படத்தில் நடிப்பது உண்மைதான் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தை முதலில் மன்சூர் அலிகானை வைத்து இயக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.