செய்திகள்

'துணிவு’ படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்

துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

DIN

துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. 

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. 

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. துணிவு படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதல் இரவு வரை படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட உள்ளார்கள். முதல் அறிவிப்பாக பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரத்தின் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது. 

படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் மைப்பா. இரண்டாவது அறிமுகம் பக்ஸ். இவர் ராஜேஷ் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளார். அடுத்த அறிமுகம் நடிகர் பிரேம். இவர் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடிக்கிறார். தொடர்ந்து அறிமுகம் ஜான் கொக்கன். இவர் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இறுதியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் கதாபாத்திரம் அறிமுகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT