பருத்திவீரன் படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் நடிகை பிரியாமணி. சமீபத்தில் இவர் நடித்த இணைய தொடரான ஃபேமிலி மேன் 2 அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிரியாமணி நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா குறித்து பேசியுள்ளார்.
அதில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகின்றன. நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஒட்டுமொத்த படத்தையும் தங்களின் தோள்களில் சுமந்துவருகின்றனர்.
நடிகை நயன்தாரா நெற்றிக்கண் போன்ற சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் போக்கு மாறி வருகிறது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் ஆடியது அவரது தைரியமான முடிவு. அவர் மிகவும் நன்றாக செய்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.