செய்திகள்

தல தோனியுடன் சீயான் விக்ரம்: எதற்காக இந்த சந்திப்பு?

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியுடன் நடிகர் விக்ரம் சந்தித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகர் விக்ரம் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்தோனியில் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள மகான் படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இருவரின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. 

நடிகர் விக்ரம் பல்வேறு சந்தர்பங்களில் தான் ஒரு கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் ரசிகர் என்பதை பேட்டிகளில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஐபிஎல் போட்டிகளின் ஏலம் தொடர்பான வேலைகளில் தோனி சென்னையில் இருக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் விக்ரம், எம்.எஸ்.தோனியை சந்தித்திருக்கிறார்.

முன்னதாக விளம்பரப் படப்பிடிப்புக்காக கடந்த நவம்பர் மாதம் தோனி சென்னை வந்திருந்தார். அப்போது தோனி நடித்த விளம்பரப்படத்தின் படப்பிடிப்பும், நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பும் ஒரே ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதனையடுத்து இருவரும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திடீரென கால், முகத்தில் வீக்கமா?சிறுநீரகக் கோளாறாக இருக்கலாம்! மருத்துவர் ஆலோசனைகள்!

என்னுடைய ஞாயிறு இப்படித்தான்... ஃபரினா ஆசாத்!

ஆபத்தான நாய்களுடன் சில மனிதர்கள்... எகோ - திரை விமர்சனம்!

தந்தைக்கு மாரடைப்பு: ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 26 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT