செய்திகள்

'எதற்கும் துணிந்தவன்' 'ராதே ஷ்யாம்' அடுத்தடுத்த நாளில் உதயநிதி வெளியிடுவதால் சர்ச்சை

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

DIN

பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. 

ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. காதலுக்கு விதிக்கும் இடையேயான போராட்டமே இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. 

இதில் எதற்கும் துணிந்தவன் மாரர்ச் 10 ஆம் தேதி வெளியாகிறது என்பதும், ராதே ஷ்யாம் திரைப்படம் வருகிற மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களையும் பாடல்களையும் கார்கி எழுதியுள்ளார். படத்துக்கான பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT