செய்திகள்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அப்டேட் இன்று(பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு வெளியாகிறது. 

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் நெல்சனும் இணைவதால் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் இன்று (பிப்ரவரி 7) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்போ அல்லது முதல் பாடல் குறித்த அறிவிப்போ இருக்கலாம் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் குறித்த அறிவிப்பு விடியோவில் நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன், அனிருத், இயக்குநர் நெல்சன் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவா் இறப்பில் சந்தேகம்: மனைவி புகாா்

கிராவல் மண் கடத்தல்: 2 போ் கைது

தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதம்

தலைமையாசிரியா் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைப்பு

SCROLL FOR NEXT