முகப்பு
செய்திகள்

உலகில் மிக பிரபல பைக்கை வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன் - விலை இவ்வளவா?

உலகில் மிக பிரபல பைக்கை இயக்குநர் வெற்றிமாறன் வாங்கியுள்ளார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:24 AM
பகிர்:

இயக்குநர் வெற்றிமாறன் பிஎம்டபுள்யூ ஆர் நைன் டி ஸ்கிராம்பிளர் என்ற பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ. 19 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பைக் 1170 சிசி இஞ்சின் கொண்டது. 

தற்போது பைக்குடன் வெற்றமாறன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் பொல்லாதவன் திரைப்படம் பல்சர் என்ற பைக்கின் மீது ஒரு இளைஞரின் காதலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெற்றிமாறன் தற்போது ஜெயகாந்தனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. 

மேலும் 9 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்துக்கும் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →