இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க, சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், மலையளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஹிந்தியில் ஷாருக்கான் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | பிக்பாஸ் லாஸ்லியாவுடன் இணையும் அஸ்வின் குமார்
குறிப்பிட்ட ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994 ஆம் ஆண்டு நம்பி நாராயணன் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தான் குற்றமற்றவர் என நம்பி நாராயணன் நிரூபித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.