செய்திகள்

காதலர் தினத்தில் விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா: வைரலாகும் விடியோ

காதலர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவுடன் இருக்கும் விடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

விக்னேஷ் சிவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நயன்தாரா அவருக்கு பூங்கொத்துடன் காதலர் தின வாழ்த்து சொல்கிறார். அந்தப் பதிவில், முதல் முறையைப் போல, அவள் வந்து பூங்கொத்து தந்தாள். அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள். காத்துவாக்குல ஒரு காதல் என்று குறிப்பிட்டுள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியான ஒரே நாளில் 1 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார். நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT