செய்திகள்

பைக்குகளில் துரத்தும் வில்லன்கள்... முறியடிப்பாரா அஜித்: வெளியான வலிமை பட புதிய ப்ரமோ

நடிகர் அஜித்தின் வலிமை பட புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது. 

DIN

வலிமை திரைப்படம் வருகிற பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரமோவை வெளியிட்டுள்ளார். அதில் காவல்துறை வாகனத்தை பைக்குகளில் வில்லன்கள் துரத்த அவர்களை துப்பாக்கியால் அஜித் சுடுகிறார்.

வலிமை படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வந்த நிலையில் கூடுதலாக ஜிப்ரானும் இந்தப் படத்தின் பின்னணி இசைப் பணிகளை கவனிக்கிறார். நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் படத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க, ஹுமா குரேஷி, சுமித்ரா, ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூட்டம் (சிறுகதைகள்)

சிவாஜியும் கண்ணதாசனும்

திரையெல்லாம் செண்பகப்பூ

கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலை (ஆய்வுரை)

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT