செய்திகள்

முடிவுக்கு வந்தது பிரச்னை: சந்தித்துக்கொண்ட இளையராஜா - கங்கை அமரன்

நீண்ட இடைவேளைக்கு பிறகு இளையராஜா மற்றும் கங்கை அமரன் சந்தித்துக்கொண்டனர்.  

DIN

சகோதரர்களான இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் / இயக்குநர்  கங்கை அமரன் ஆகியோர் கருத்து வேறுபாடு காரணமாக நீண்ட வருடங்களாக பேசாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பாவலர் சகோதரர்கள் இணைந்தனர் என்று மகிழ்ச்சி தெரிவிக்க, அவரது தம்பியான நடிகர் பிரேம்ஜி பகிர்ந்து, அப்பாவும், பெரியப்பாவும் என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் 'வலிமை': 'வேற மாறி' களமிறங்கிய படக்குழு

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறன் கொண்டவர் கங்கை அமரன். கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற கங்கை அமரன் இயக்கிய படங்களில் இளையராஜாவின் பாடல்கள் காலங்கள் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை எழுதியும் பாடியும் இருக்கிறார் கங்கை அமரன். இருவரது சந்திப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சிறுதொழில் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

புத்திசாலித்தனமான லோகேஷ் கனகராஜ் படம்... கூலி குறித்து அனிருத்!

SCROLL FOR NEXT