முகப்பு
செய்திகள்

’அரபிக் குத்து’ பாடல் புதிய சாதனை

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் 4 கோடிப் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் 4 கோடிப் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

நடிகர் விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த் பிப்.14 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடினர்.

’பீஸ்ட்’ படத்திலிருந்து வெளியாகும் முதல் பாடல் என்பதாலும், அப்பாடலுக்கு முன் வெளியான புரோமோ விடியோவாலும் ‘அரபிக் குத்து’ பாடல் தற்போது வெளியான 3 நாள்களில் 4 கோடி (40 மில்லியன்) பார்வைகளைக் கடந்ததுடன் யூடியூபில் விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற தமிழ் பாடலாகவும் இப்பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவிருப்பதால் பீஸ்ட் படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →