செய்திகள்

தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் பதிவால் ரசிகர்கள் ஏமாற்றம்

தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் பதிவால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

DIN

தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது அஜித் நடிப்பில் வலிமை, உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் நெஞ்சுக்கு நீதி, ஆர்ஜே பாலாஜி நடிக்கும் வீட்ல விசேசங்க போன்ற படங்களை தயாரித்து வருகிறார். இதில் வலிமை திரைப்படம் வருகிற 24 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கவிருப்பதாகவும், இந்தப் படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது.

ரஜினிகாந்த்துக்கு அருண்ராஜா காமராஜ் சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதித்துவிட்டதாகவும் அந்தத் தகவலில் கூறப்பட்டது.  அருண்ராஜா காமராஜ் ஏற்கனவே கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் ரஜினிகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீண்ட ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் எனக்கு நண்பர். நாங்கள் அவ்வப்போது சந்தித்து சில யோசனைகளை பகிர்ந்துகொள்வோம்.

நாங்கள் இணைந்து பணிபுரிய முடிவெடுத்தால் அதனை அறிவிக்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். கசிந்த தகவல்கள் அப்போது உங்களுக்கு கிடைக்காது'' என்று தெரிவித்தார். இந்தத் தகவல் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT