பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளாகிறது. அதாவது நடிகர் கார்த்தி திரையுலகில் அடியெடுத்துவைத்து 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். முதல் படத்திலேயே தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபித்தார் கார்த்தி.
படம் முழுக்க பருத்திவீரனாகவே வாழ்ந்திருப்பார். அமீர் இயக்கிய இந்தப் படத்தில் யுவனின் பாடல்களும், பின்னணி இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படத்தை கூடுதல் சுவாரசியப்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பதிவில், ''பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகனாக களமிறங்கியதற்காக நான் ஆசிர்வதிக்கப்படவனாக உணர்கிறேன். இந்தப் படத்தில் என்னுடைய என்னுடைய ஒவ்வொரு அசைவும் இயக்குநர் அமீரால் வடிவமைக்கப்பட்டது. அவர் சொல்லிக்கொடுத்துதான் நான் நடித்தேன். எல்லா பெருமையும் அவரையே சேரும்.
இதையும் படிக்க | பிரபல மலையாள நடிகை கே.பி.ஏ.சி. லலிதா காலமானார்
இந்தப் படத்தின் மூலம் நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு கற்றுக்கொடுத்த விதத்தின் காரணமாக, நான் என் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்தேன். என்னை இந்த இடத்துக்கு அழைத்து சென்ற இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல், அண்ணா, என்னுடைய ரசிகர்கள், ஊடகத்தினர் அனைவருக்கும் நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.