முகப்பு
செய்திகள்

அஜித்தின் ‘வலிமை’: அறிய வேண்டிய தகவல்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் குறித்து சில தகவல்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் குறித்து சில தகவல்கள்.

1. நீண்ட நாள் கழித்து வெளியாகும் அஜித் திரைப்படம்

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு வருட இடைவெளியில் வெளியாகிவிடும். ஆனால், வலிமை படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே கரோனா தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட ’விஸ்வாசம்' வெளியாகி 2 ஆண்டுகள் கழித்து வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

2. அஜித்-வினோத் கூட்டணி:

’சதுரங்க வேட்டை’ ’தீரன்’ படங்களை இயக்கி நல்ல கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் வினோத். முன்னதாக, இவருடன் அஜித் இணைந்தாலும் நேரடியாக புதிய கதையில் நடிக்காமல் ஹிந்தியில் வெளியான ‘பிங்க்’ திரைப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ எனப் பெயரிட்டு வினோத் இயக்கினார்.

இப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லையென்றாலும் முக்கியமான படமாக பேசப்பட்டது. அடுத்தது, சிவா இயக்கத்தில் உருவான ‘விஸ்வாசம்’ படத்தில் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தார் அஜித்.

அதற்கடுத்து, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் ‘வலிமை’-யில் இயக்குநர் வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.

3. வழக்கமான ‘பைக் சண்டை’ அல்ல

மங்காத்தா திரைப்படத்திற்குப் பின் அஜித் தன்னுடைய படங்களில் ஒரு காட்சியிலாவது ‘பைக் ஸ்டண்ட்’களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார்.

ஆனால், வலிமையில் முழுக்க வேறு மாதிரியான ‘பைக்’ சண்டைக் காட்சிகள் இடம் பெற்றதுள்ளதால் படத்தின் மீதான ரசிகர்களின் ஆவல் மேலும் அதிகரித்துள்ளது.

4. அஜித்தின் முதல் ‘பான் இந்தியா’ திரைப்படம்

வலிமையின் இன்னொரு முக்கியமான அம்சம் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகிறது. இது நடிகர் அஜித்தின் முதல் ‘பான் இந்தியா’ திரைப்படம். 

5. சமூகக் கருத்து

நடிகர் அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களில் எதாவது ஒரு வசனத்திலாவது சமூகத்திற்கான கருத்தை பேசுவார். ‘வலிமை’ திரைப்படம் முழுக்க முழுக்க போதைப் பொருளை நாடி சீரழியும் இளம் தலைமுறையினரைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால், ’நேர்கொண்ட பார்வை’க்கு பிறகு ‘வலிமை’-யிலும் வினோத்-அஜித் கூட்டணி முக்கியமான பிரச்னையை முன் வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →