நடிகை ஸ்ருதி ஹாசனும் வரைபட கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகின்றனர். இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் ஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர் நாங்கள் இப்பொழுதுதான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். வரைபடம், இசை ஆகியவற்றின் உருவாக்கத்தில் ஈடுபட்டு வருகிறோம். இது ஆக்கப்பூர்வமான பயணமாகும். இது எங்கள் கலைப்பயணத்துக்கு தூண்டுகோளாக இருக்கிறது.
அவர் என்னால் ஈர்க்கப்பட்டார். நான் அவரால் ஈர்க்கப்பட்டேன். இது தான் எங்கள் இருவருக்கிடையேயான உறவு. புதிதாக ஒன்றை உருவாக்குவதில் நேரத்தை செலவிடுகிறோம். இது திருமணத்தை பற்றி சிந்திப்பதை விட முக்கியமானது. இது படைப்பாற்றலின் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.