செய்திகள்

தனுஷ் பட டிரெய்லரை வெளியிடுவாரா சிம்பு ?

தனுஷ் பட டிரெய்லரை சிம்பு வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசயமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் வசனம் மற்றும் பாடலக்ளை விவேக் எழுதியுள்ளார். 

இந்தப் படத்திலிருந்து பொல்லாத உலகம் என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்தப் படத்தின் டிரெய்லரை யார் வெளியிடப்போகிறார்கள் என யூகியுங்கள் என படக்குழு தகவல் பகிர்ந்திருந்தது.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் தங்கள் கணிப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தின்  டிரெய்லரை சிம்பு வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT