செய்திகள்

'வலிமை' எந்த ஓடிடியில், எப்பொழுது வெளியாகிறது தெரியுமா?

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் நாள் குறித்து தகவல் கிடைத்துள்ளது. 

DIN

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் வலிமை. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்தப் படம் வருகிற மார்ச் 24 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளதாக கூறப்பட்டது. படத்தில் இசை யுவன் ஷங்கர் ராஜா என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஜிப்ரானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இசையமைப்பாளர் யுவன், தனது ட்விட்டர் பக்கத்தில் பின்னணி இசை ஜிப்ரான் என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்தப் படத்தில் பைக் ரேஸ் காட்சிகள், சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. முதல் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வை ஏற்படுத்துவதாகவும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருப்பு நிலா.. ஐஸ்வர்யா ராஜேஷ்!

புல்லட் பேபி.. கீர்த்தி ஷெட்டி!

பிக் பாஸ் வீட்டிற்குப் பொருந்தாதவர்கள்! குவியும் விமர்சனங்கள்!

எஸ்டிஆர் - 49 புரோமோ எப்போது?

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: பள்ளி வாயிலாக விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT