பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்துகொண்டார் அபிநய். இவர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி தம்பதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ராமானுஜம் போன்ற படங்களில் அபிநய் நடித்திருந்தார்.
ஏற்கனவே திருமணமான அபிநய், பிக்பாஸ் வீட்டில் பாவனியுடன் காதல் என சுற்றிக்கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நிலையில், பாவனி விவகாரம் தொடர்பாக அவரது மனைவிக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக இருவரும் விவகாரத்து செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவியது.
இதையும் படிக்க | இயக்குநா் சங்கத் தலைவராக ஆா்.கே.செல்வமணி தோ்வு
இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பாவனியுடன் நட்பு தொடர்கிறதா என்ற கேள்விக்கு ஸ்மைலியை பதிலாக அளித்திருந்தார். உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்
பின்னர் விளக்கமளித்த அவர், ''இதுபோன்ற செய்திகளை ஊடகங்களில் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. நானும் எனது மனைவி அபர்னாவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்'' என விளக்கமளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.