செய்திகள்

என்ன சிவாங்கி இப்படி இளச்சுட்டாங்க? அதுவும் இவ்ளோ கிலோவா ?

சிவாங்கி தற்போது தான் எடை குறைந்ததாக விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

DIN

குக் வித் கோமாளி சீசன் 3 மிக கலகலப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த சீசன் அளவுக்கு இல்லையென்றாலும் இந்த சீசனில் சிரிப்புக்கு பஞ்சமில்லை. குறிப்பாக கடந்த சீசன்களைப் போல கோமாளிகள் சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா, சக்தி ஆகியோருடன் அதிர்ச்சி அருண், பரத், ஷீத்தல், குரேஷி ஆகியோர் புதிதாக களமிறங்கியிருக்கின்றனர்.  

புகழ் அவ்வப்போது சிறப்பு கோமாளியாக கலந்துகொள்கிறார். குறிப்பாக சிவாங்கி, புகழின் அண்ணன் தங்கை பாசம் சிரிப்பை வரவழைக்கிறது. நடிகர் தர்ஷனை சிவாங்கி அண்ணா என அழைக்க, புகழ் கலங்க என கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடைக் குறைந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,2015-ல் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்து, இந்த  ஆண்டு 65 கிலோவிலிருந்து 55 கிலோவுக்கு எடையைக் குறைத்திருக்கிறேன்.

தற்போது சரியான எடையில் இருக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். உங்களைப் பொறுத்தவரை எந்தத் தோற்றத்தில் நான் சரியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT