செய்திகள்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த பட ஹீரோ இவரா ?

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்தப் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த வரும் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. மேலும் நடிகர் சிம்புவுக்கு அவரது திரையுலக வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படமாகவும் மாநாடு அமைந்தது. 

மாநாடு படம் வெளியாகவதற்கு முன்பே இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் ஒரு காதல் படத்தை இயக்கியிருந்தார். பிரேம்ஜி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்ததாக கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். சுதீப் 'நான் ஈ', 'புலி' போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடிகர் சுதீப்புடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நீங்கள் அருமையான சமையல் கலைஞர். உங்களுடன் இணையும் படத்துக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT