செய்திகள்

பொங்கலுக்கு தெலுங்கில் மட்டும் வெளியாகும் கார்த்தி படம்: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் மட்டும் கார்த்தியின் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

DIN

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு தமிழுக்கு நிகராக தெலுங்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவரது படங்களும் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இந்த நிலையில் சங்கராந்திக்கு கார்த்தியின் படம் தெலுங்கில் மட்டும் வெளியாகவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. கார்த்தியின் படமான 'நான் மகான் அல்ல' திரைப்படம் தெலுங்கில் 'நா பேரு சிவா' என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை தெலுங்கில் 'நா பேரு சிவா 2' என்ற பெயரில் வெளியிடவுள்ளதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த சங்கராந்திக்கு கரோனா பரவல் காரணமாக எந்தப் பெரிய படங்களும் வெளியாகாததால் நா பேரு சிவா 2 நல்ல வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீஸர் பணி: விண்ணப்பிக்க நாளை கடைசி

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

இனி அதிமுக அல்ல, எதிமுக! - TTV Dhinakaran

750 தாமரைகள் கொண்ட மணல் சிற்பம்: பிரதமர் மோடிக்கு பட்நாயக் வாழ்த்து!

Jailer 2 ரிலீஸ் குறித்து Rajinikanth!

SCROLL FOR NEXT