செய்திகள்

நடிகர் சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதி என தகவல்

கரோனா பாதிப்பு காரணமாக நடிகர் சத்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

DIN

கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. பாதிப்பை குறைக்கும் பொறுட்டு தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் கரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நடிகர்கள் அருண் விஜய், மகேஷ் பாபு, நடிகை த்ரிஷா, இசையமைப்பாளர் தமன், நடிகை ஷெரீன் உள்ளிட்டோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் நடிகர் சத்யராஜுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இயக்குநர் பிரியதர்ஷனும் கரோனா பாதிப்பினால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT