செய்திகள்

குக் வித் கோமாளி 3-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், கோமாளிகள் இவர்களா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி கடந்த இரண்டு சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. குறிப்பாக கடந்த சீசன் பெரும் வெற்றிபெற்றது. 

கரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியிருந்தனர். இந்த நிலையில் நகைச்சுவைக கலந்த சமையல் நிகழ்ச்சியாக பெரும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்திருந்தது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஷ்வின் குமார், பவித்ரலக்ஷ்மி, தர்ஷா குப்தா, புகழ், சிவாங்கி, தீபா, பாலா உள்ளிட்டோருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது இதன் 3வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளன. அதன்படி இயக்குநரும் நடிகருமான மனோபாலா, கருணாஸின் மனைவியும், பாடகியுமான கிரேஸ், பாடகர் அந்தோணிதாசன், நடிகர் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர். 

அதே போல கோமாளிகளாக குரேஷி, மூக்குத்தி முருகன், பரத், சிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகையூரில் 100 மி.மீ. மழைப் பதிவு!

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

கோவை குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

SCROLL FOR NEXT