முகப்பு
செய்திகள்

இயக்குநர் சசியின் 'நூறு கோடி வானவில்': வெளியான விடியோ

இயக்குநர் சசியின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறு கோடி வானவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:06 AM
பகிர்:

சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் சசி. இவர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ், தெலுங்கில் பெரும் வெற்றிபெற்றது. 

கடைசியாக இவர் இயக்கிய சிவப்பு மஞ்சள் பச்சை ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை. இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் நூறு கோடி வானவில் என்ற படத்தை சசி தற்போது இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். இவர் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்து வருகிறார். 

சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு இசையமைத்த சித்து குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →