செய்திகள்

'மாநாடு' படம் குறித்து ரசிகரின் கருத்து: 'ஒரே காட்சி திரும்ப திரும்ப வருது...' விடியோ பகிர்ந்த பிரேம்ஜி

மாநாடு படத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருவதால் அந்தப் படம் எனக்கு பிடிக்கவில்லை என ரசிகர் ஒருவர் பேசிய விடியோவை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார். 

DIN

வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி விமசகர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் டைம் லூப் முறையில் அமைந்த இந்தப் படத்தின் காட்சிகள் படத்தை பெரிதும் சுவாரசியப்படுத்தியது. 

இந்த நிலையில் பிரம்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோ பகிர்ந்துள்ளார். படம் வெளியான போது மக்கள் கருத்து கேட்கும் விடியோவில் பேசிய ரசிகர் ஒருவர் படத்தின் காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதால் தனக்கு படம் பிடிக்கவில்லை என்றும் படத்தில் இருந்து பாதியில் வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விடியோவை பிரேம்ஜி நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.   

வெங்கட் பிரபு தற்போது அசோக் செல்வன் நடிக்கும் மன்மத லீலை படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக சம்யுக்தா மற்றும் ஸ்மிருதி வெங்கட் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT