செய்திகள்

விண்வெளியில் இளையராஜா பாடல்? : முழு விவரம்

இளையராஜா இசையமைத்துள்ள பாடல் விண்வெளியில் ஒலிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தனது இசையின் மூலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சிவருபவர் இளையராஜா. புத்தாண்டு என்றாலும் இளையாராஜா பாடல், பொங்கல் என்றால் இளையராஜா பாடல் என நம் வாழ்வுடன் கலந்துவிட்டது அவரது இசை. 

அவருக்கு பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்துவிட்டார்கள். இருப்பினும் அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் ரசிகர்களுக்கு தற்போதுவரை இசை விருந்து படைத்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்துக்கு அவர் தான் இசை. 

இப்படி நம் தாத்தா, அப்பா, துவங்கி, நம் காலத்திலும் இசையால் நம்மை ஆட்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இளையராஜாவின் பாடல் இனி விண்வெளியிலும் கேட்க விருக்கிறது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று இஸ்ரோ உதவியுடன் உலகில் மிகச்சிறிய செயற்கை கோள்கள் ஒன்றை உருவாக்கியுள்ளதாம். இது நாசாவின் உதவியுடன் வருகிற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த செயற்ககைக்கோள் விண்வெளிக்கு செலுத்தப்பட்டு அங்கு இளையாராஜா பாடல் ஒலிபரப்பப்படவுள்ளது. 

இதற்காக இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் நடந்த புதுமுகளை உள்ளடக்கி எழுதப்பட்டுள்ள இந்தப் பாடலை இளையராஜா இசையமைத்து பாடியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT