கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடரில் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற பெயரில் புதிய தொடர் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடரில் நடிகை சாயா சிங் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
இந்தத் தொடர் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க | சென்னையின் பிரபல திரையரங்கில் 'விக்ரம்' படப்பிடிப்பு: கமல் குறித்த நினைவுகளை பகிர்ந்த உரிமையாளர்
சந்தையில் கடை வைத்து தொழில் நடத்தும் 4 பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பங்கள்தான் நம்ம மதுரை சிஸ்டர்ஸ் என்ற தொடரின் கதை என்பது தெரியவருகிறது. சாயா சிங் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ரன் தொடரில் நாயகியாக நடித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.