செய்திகள்

பிக் பாஸ் அல்டிமேட்: மூன்றாவது போட்டியாளர் இவரா?

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளர் குறித்த தகவலை டிஸ்னி பிளஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாளர் குறித்த தகவலை டிஸ்னி பிளஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5  ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அந்த இறுதி நிகழ்ச்சியின் போதே பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் காணலாம். இதன் மூலம் நாள் முழுவதும் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்கள் தெரிந்துகொள்ளலாம். வரும் 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். 

இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்குபெறவுள்ளதாக சிநேகன் மற்றும் ஜூலி ஆகியோரின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது போட்டியாளர் குறித்த யார் அந்த ஹவுஸ்மேட் என்ற தலைப்பில் விடியோவாக வெளியிட்டுள்ளனர்.

அந்த விடியோவில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், மூன்றாவது ஹவுஸ்மேட் வனிதா விஜயகுமார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT