முகப்பு
செய்திகள்

தனுஷ் படத்திலிருந்து பாதியில் விலகிய பிரபலம்: ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பதிவு

தனுஷ் படத்தில் இருந்து விலகுவதாக பிரபலத்தின் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

Updated On : 26 ஜனவரி, 2022 at 11:59 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:44 PM

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு தெலுங்கில் சார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கி வருகிறார். 

இந்தப் படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தினேஷ் கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னால் நடிகர் தனுஷின் வாத்தி படத்தில் பங்குபெற முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. விரைவில் ஃபார்சுன் ஃபார் சினிமா சித்தாரா எண்டர்டெயின்மென்ட்டுடன் வேலை செய்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் தனது பதிவில் கோவிட் என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தியுள்ளதால், அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக விலகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.