செய்திகள்

சமூக வலைதளங்களில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் நடனம்: ''மெதுவா என்னத் தொடவா..''

விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனாவாக நடிக்கும் ஹேமாவின் நடன விடியோ சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது.  

DIN

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. நான்கு அண்ணன் தம்பிகளின் வாழ்வில் நடக்கும்  பாசப்போராட்டம் என்ற எளிய கதையாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமான காட்சிகள், சுவாரசியமான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. 

இந்தத் தொடரில் முல்லை - கதிர் ஜோடிக்கு பிறகு ரசிகர்களைக கவர்ந்தது மீனா - ஜீவா ஜோடி தான். மீனா என்கின்ற வேடத்தில் ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார்.  செய்திவாசிப்பாளராக இருந்த ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் நடிகையாக கலக்கி வருகிறார். 

சதிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டிருந்த ஹேமாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹேமா பதிவிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

இந்த நிலையில் நடிகை ஹேமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் பட பாடலான சும்மா சுர்ருனு பாடலுக்கு தான் அவர் நடனமாடியுள்ளார். அவர் தனக்கே உரிய நளினத்துடன் அந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

SCROLL FOR NEXT