செய்திகள்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து பிரபல இயக்குநர் தகவல்

DIN

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிராஜா முற்றிலும் குணமாகிவிட்டதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், கரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜா பூரண நலத்துடன் இன்று காலை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் என்ற செய்தியை அவரது உதவியாளர் மூலம் அறிந்தேன் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்திருந்த ராக்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT