முகப்பு
செய்திகள்

லிங்குசாமிக்கு வெற்றியைக் கொடுக்குமா? - ராம் பொத்தினேனியின் 'தி வாரியர்' பட மிரட்டலான டிரெய்லர் இதோ

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ள தி வாரியர் படத்தின் டிரெய்லர் வெளியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:41 AM
பகிர்:

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ள தி வாரியர் படத்தின் டிரெய்லர் வெளியானது.

கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியானது. இதனையடுத்து கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு லிங்குசாமி இயக்கியிருக்கும் படம் தி வாரியர். 

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து சிம்பு பாடிய புல்லட் மற்றும் விசில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லர் வழக்கமான போலிஸ் ஹீரோ படங்களை நினைவுபடுத்துகிறது. இந்தப் படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ஆதி வில்லனாக நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.