செய்திகள்

உலக அளவில் கடைசி விவசாயி படத்துக்கு 2ஆம் இடம் - விக்ரம் படத்துக்கு எந்த இடம் தெரியுமா?

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்த கடைசி விவசாயி படத்துக்கு உலக அளவில் 2வது இடம் கிடைத்துள்ளது. 

DIN

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்த கடைசி விவசாயி படத்துக்கு உலக அளவில் 2வது இடம் கிடைத்துள்ளது. 

உலக அளவில் திரைப்படங்கள் குறித்து லெட்டர்பாக்ஸ்டி என்ற நிறுவனம் மதிப்பிட்டிவருகிறது. இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளியான படங்களை இந்த நிறுவனம் தரவரிசைப்படுத்தியது. 

அதில், மணிகண்டன் தயாரித்து இயக்கி, விஜய் சேதுபதி சிறப்பு வேடத்தில் நடித்திருந்த கடைசி விவசாயி திரைப்படத்துக்கு 2ஆம் கிடைத்துள்ளது. ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் 6வது இடத்திலும் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 11வது இடத்திலும் உள்ளது. 

ஓடிடி தளங்களின் வருகைக்கு பிறகு இந்திய திரைப்படங்கள் உலக அளவில் கவனம் பெற்றுவருகின்றன. அந்த வகையில் குறைவான பொருட்செலவில் உருவான கடைசி விவசாயி படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் தமிழகத்தில் விவசாயிகளின் நிலையை மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

SCROLL FOR NEXT