செய்திகள்

ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்?

ட்விட்டரில் நடிகர் தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


ட்விட்டரில் நடிகர் தனுஷின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் தனுஷ் ட்விட்டரில் தனது படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் வெளியாகும்போது மட்டும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தனுஷ் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். 

இந்தப் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் ப்ரமோ விடியோவுடன் வெளியானது. நடிகர் தனுஷ் இதனை ட்விட்டரில் பகிர, இயக்குநர் ஆனந்த் எல்.ராய், பிரசன்னா, கிருஷ்ணா உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் இன்று (ஜூலை 9) நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டது. பின்னர் சில நிமிடங்களிலேயே ப்ளூ டிக் மீண்டும் அளிக்கப்பட்டது. பொதுவாக ட்விட்டரில் பெயரை மாற்றினால் ப்ளூ டிக் நீக்கப்படுவது வழக்கம். ஆனால் தனுஷ் தனது பெயரை மாற்றாத போது ப்ளூ டிக் ஏன் நீக்கப்பட்டது என தெரியவில்லை. 

நடிகர் தனுஷ் நடிப்பில் தி கிரேமேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து திரைக்குவரவிருக்கின்றன. இதில் வாத்தி திரைப்படம், தெலுங்கில் சார் என்ற பெயரில் உருவாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT