செய்திகள்

''இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கப்போது ...'' - உதயநிதி அதிரடி

சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படம் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கணித்துள்ளார். 

DIN

சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படம் இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கணித்துள்ளார். 

சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் கார்கி. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. வருகிற 15 ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 

இந்தப் படத்தில் காளி வெங்கட் , ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயபிரகாஷ், பிரதாப், லவிங்ஸ்டன், கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மியும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தை பிளாக்கி, ஜீனி, மற்றும் மை லெஃப்ட் ஃபுட் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து இந்தப் படத்தை வெளியிடுகின்றனர். 

கௌதம் ராமசந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஸ்ரீயாந்தி மற்றும் பிரேம் கிருஷ்ணா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

இந்தப் படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக கார்கி படம் இருக்கும். திரையரங்கில் சென்று பாருங்கள். எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதலின் மொழி... அஹானா கிருஷ்ணா

அழகும் மனமும்... நர்கிஸ் ஃபக்ரி!

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

SCROLL FOR NEXT